search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிப்காட் தொழிற்பேட்டை"

    • வாய்க்கால் சீரமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டடார்.
    • மேலும் பவானிசாகர் அருகே சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கும் திட்டம் இல்லை.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால் வலது மற்றும் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டது.

    இந்த வாய்க்கால் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியினை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டடார். தொடர்ந்து அவர் பணி யினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.

    அப்போது அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    பவானிசாகர் அணையில் இருந்து 2022-23-ம் ஆண்டு முதல்போக நஞ்சை பாசனத்திற்கு 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் கடந்த 12.8.2022 முதல் 9-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    விவசாயிகளின் கோரிக்கை யை ஏற்று கடந்த 9-ந் தேதி முதல் வரும் 29-ந் தேதி வரை 20 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி கீழ்பவானித்திட்ட பிரதான வாய்க்காலின் வலது கரையில் மழைநீர் வடிகால் பாலத்தின் அருகே சிறு பள்ளம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் வலது கரை யில் நீர் கசிவு அதிகமாகி உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேரல் சேதமடைந்து இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓடை வழியாக தண்ணீர் செல்லத் தொடங்கியது.

    இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தல் படி சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு போர்கால அடிப்படையில் இரவு, பகலாக வாய்க்கால் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டது. சீரமைப்பு பணிகள் விரைவில் முழுமையாக முடிக்கப்படும்.

    இதையடுத்து பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். அடுத்த 3 நாட்களுக்குள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லும் வகை யில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தண்ணீர் புகுந்த விவசாய விளைநிலங்கள் கண க்கெடுக்கப்பட்டு பாதிப்பை பொறுத்து இழப்பீடு வழங்கப்படும்.

    மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பயிர்களை காப்பாற்றும் நடவடிக்கை எடுக்கும் வகை யில் கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ள ப்படும்.

    மேலும் பவானிசாகர் அருகே சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கும் திட்டம் இல்லை. சிப்காட் அமைப்ப தற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்பட வில்லை. விவசாய நில ங்களை கையகப்படுத்தி சிப்காட் எப்போதும் அமைக்கப்படாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) உதயகுமார், உதவி பொறியாளர்கள் பவித்ரன், ஜெகதீஷ், சபரி நாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×